ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விக்கப்படும் : போலீசார் அறிவிப்பு

கோவை, அக்டோபர்.30: கோவை மாநகர 23-வது வார்டுக்கு உட்பட்ட  ஆர்.எஸ்.புரம்  பகுதியில் கோவை மாநகர போலீசார் ஒரு புறம் மட்டும் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். 



இதற்காக அந்த பகுதிக்குட்பட்ட பொன்னுரங்கம்  சாலை, வெங்கடசாமி சாலை, பெரியசாமி சாலை மற்றும் பாஷ்யகர்லோ சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளின் ஒருபுறம் 'நோ பார்க்கிங்' பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த விதியை மீறி வாகனங்களை இருபுறமும் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 



இது தொடர்பாக, போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் வரும் 1.11.2017 முதல் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது. அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவோருக்கு ரூ.100 (177 Motor Vehicle Act) அல்லது ரூ.500 (179 Motor Vehicle Act) அபராத தொகை வசூலிக்கப்படும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக யாரேனும் வாகனங்களை நிறுத்தினால் 23-வது வார்டு குடியிருப்பு வாசிகள் 8190000100 என்ற வாட்சாப் எண்ணுக்கு புகார்களை அனுப்பலாம். 



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...