கோவை, அக்டோபர்.30: கோவை மாநகர 23-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை மாநகர போலீசார் ஒரு புறம் மட்டும் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்காக அந்த பகுதிக்குட்பட்ட பொன்னுரங்கம் சாலை, வெங்கடசாமி சாலை, பெரியசாமி சாலை மற்றும் பாஷ்யகர்லோ சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளின் ஒருபுறம் 'நோ பார்க்கிங்' பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விதியை மீறி வாகனங்களை இருபுறமும் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :-
ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் வரும் 1.11.2017 முதல் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது. அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவோருக்கு ரூ.100 (177 Motor Vehicle Act) அல்லது ரூ.500 (179 Motor Vehicle Act) அபராத தொகை வசூலிக்கப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக யாரேனும் வாகனங்களை நிறுத்தினால் 23-வது வார்டு குடியிருப்பு வாசிகள் 8190000100 என்ற வாட்சாப் எண்ணுக்கு புகார்களை அனுப்பலாம்.