மாநகராட்சி விதித்த புதிய வரிவிதிப்பினை கண்டித்து அனைத்துக் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சியில் புதிதாக குப்பை வரி மற்றும் குடிநீர் டெபாசிட் கட்டணம் விதிப்பு போன்றவை உயர்த்தப்பட்டது. இந்த புதிய வரி விதிப்புகளை கண்டித்து திமுக, காங்கிரஸ், மதிமுக, சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள் , கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் ஓருபகுதியாக அனைத்து கட்சிகள் சார்பில் கோவை மாநகராட்சி முழுவதும் 100 வாட்டுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி விதித்துள்ள புதிய வரிகளை திரும்ப பெற வேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.



மேலும், அடுத்தகட்டமாக கோவை மாநகராட்சியை 8 கட்டமாக முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதனை தொடர்ந்து, புதிய வரி விதிப்பு முறைகளை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக் தெரிவித்தார். இதனை தொடந்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல, டவுன்ஹால் பகுதியில் தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அப்பாஸ் தலைமையில் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்ட 47 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதே போன்று மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போராட்டம் நடத்திய அனைத்துக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...