கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘காட்மா’ தொழில் அமைப்பு, மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்பி, பிரச்சனைக்கு தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கமான ‘காட்மா’, தமிழகத்தில் நீடித்து வரும் மின்தடை பிரச்சனைக்கு தமிழக முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘காட்மா’ தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறியதாவது:

“கடந்த சில நாட்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின்தடை ஏற்பட்ட பிறகு அதை சரிசெய்ய நீண்ட நேரம் ஆகுவதால் தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்தடை நீடிப்பதால் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படாததால் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகாரிகளே உதவியாளர்களின் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணம், உச்சநேர மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் யூனிட் கட்டணம் உள்ளிட்டவை பலமடங்கு உயர்த்தப்பட்ட போதிலும், தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படாதது கவலைக்கிடமானது. இது எதிர்காலத்தில் தொழில்துறை செயல்பாடுகளை மேலும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

மேலும், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். தொழில் அமைப்புகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...