நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை:

கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தொடர்ந்து கலக்கப்படுவதால், ஆற்றின் நீர்தன்மை மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.



இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் “Let’s Make Coimbatore Sweet Again” என்ற முன்னெடுப்பின் கீழ் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக நிர்வாகிகள் மனு அளித்து, நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி, “அரசாங்கமே சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலக்குகிறது. தனியார் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் இதற்கு காரணமாக உள்ளன,” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “நொய்யல் ஆற்றின் நீர் மாதிரிகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில், அதில் அதிக அளவில் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நொய்யல் ஆறு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,” என்றும் தெரிவித்தார்.

புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், முதல் கட்டமாக 700-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், “அதைவிட முக்கியமானது குடிநீர் பாதுகாப்பு பிரச்சனை. மது அருந்துபவர்கள் பணம் கொடுத்து வாங்கி அருந்துகின்றனர். ஆனால் பொதுமக்கள் தினமும் குடிநீர் என்ற பெயரில் விஷத்தை குடித்து வருகின்றனர்,” என்று கூறினார்.

மேலும், கோவையில் பல கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் சூயஸ் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், “வேங்கை வயலுக்கு ஒரு நியாயம், நொய்யலுக்கு ஒரு நியாயம் என்ற நிலை இருக்கக் கூடாது. அரசாங்கமே கழிவுநீரை ஆற்றில் கலக்க அனுமதிக்கலாமா?” என்று கேள்வி எழுப்பி, இதற்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...