கோவை மாநகரில் ஐந்து மண்டலங்களிலும் குடிநீர் இணைப்பிற்காக கூடுதல் வைப்புத் தொகை மற்றும் குப்பைக்கான வரியை பொதுமக்களிடம் கோவை மாநகராட்சி வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
முறையான குடிநீர் விநியோகமும், நகர்புறங்களில் குவிந்துள்ள குப்பைகள் தூய்மைப்படுத்தாத நிலையிலும் கோவை மக்களிடம் இருந்து பணத்தை பறிக்க நினைக்கும், கோவை மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க., சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ஜ.க.,வின் கோவை மாவட்ட தலைவர் சி.ஆர் நந்தகுமார் தலைமையில் நேற்று (செப்.,5) மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்ட பா.ஜ.க., உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.