மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தும் 196 கட் ஆப் பதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனதால் மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இன்போ பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த போராட்டத்தின் போது, நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நீட் தர்வினால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நீதிகிடைக்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.