“நதிகளை மீட்போம்” விழிப்புணர்வு பயணம் கோவையில் இருந்து ஆரம்பம் - தொடக்க விழாவில், சேவாக், மிதாலிராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

வேகமாக வற்றிவரும் நம் தேசத்து நதிகளை மீட்க, அவற்றின் அடிப்படை நீரோட்டத்தை அதிகரிக்க வரையறை வகுத்து,  மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய, 'நதிகளை மீட்போம்' என்னும் விழிப்புணர்வு இயக்கம் உருவாகி உள்ளது. 

இதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சார பயணத்தின் துவக்க நிகழ்ச்சி, நேற்று (செப்.3) கோவை வ.உ.சி.மைதானத்தில் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட பேரணிக் கூட்டத்தில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கான மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பத்நோர், கோவை மாவட்டஆட்சியர் டி.என்.ஹரிஹரன், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ராமசாமி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலிராஜ், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், மஹிந்திரா குழுமத்தின் மூத்த துணை இயக்குநர் விஜய்ராம் நக்ரா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தனியார் நிறுவனங்கள், ராணுவ வீரர்கள் என பல தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில், கோலாகலமான இசை நிகழ்ச்சியும் நடந்தது.



நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்  வழங்கும் ஆதரவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ராமசாமியும், சத்குருவும் மாற்றிக்கொண்டனர்.



நிகழ்ச்சில்  ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு பேசுகையில், இன்று நாம் எடுத்திருக்கும் இந்த படி, நம் தேசத்து வரலாற்றில் மிக முக்கிய படி.  இது மக்கள் இயக்கமாகவும், விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் இருப்பதோடு நில்லாமல், வெற்றிகரமான செயல்திட்டமாக உருவெடுக்க வேண்டும் என்றால், மக்கள் அனைவரும் உறுதியாக துணைநிற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீண்டகால நன்மை பயக்கும் திட்டங்களுக்கு நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்று மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். இது ஒரு போராட்டமோ, ஆர்பாட்டமோ அல்ல என்றார்.



மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்  பேசுகையில், நமது நதிகளை பாதுகாக்க ஒரு பேரணி தேவைப்படும் அளவிற்கு தற்போது சுற்றுச்சூழல் குறித்து கவனமே இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.  இவ்வியக்கம் அடுத்த சில வருடங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற, மக்கள் அனைவரும் தங்கள் பங்கினை ஆற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், பஞ்சாப் மாநில ஆளுநர் வி.பி.சிங் பத்நோர் பேசுகையில், இன்று சதகுருவுக்கு 60 வயதாகிறது. யாருமே தனது 60வது பிறந்த நாளை இப்படிப்பட்ட வகையில் கொண்டாடியிருக்க வாய்ப்பில்லை. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. இந்த நாட்டிற்கே ஒரு மகத்தான வரலாற்று சிறப்பு மிக்க இயக்கமாகும். ஐந்து நதிகளின் மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வருவதால், இது கட்டாயம் மக்கள் அனைவருக்கும் பலனளிக்கும் என்பதை அறிவேன் என்று கூறினார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசும்போது, இது இனி சத்குருவின் நோக்கம் மட்டுமல்ல, இது எங்கள் அனைவரின் நோக்கமும் உறுதியும் கூட என்று கூறினார். தான் பிறந்தபோது நதிகள் செழிப்பாக இருந்தன, இனி தன் கடைசி காலத்திற்குள் மீண்டும் நதிகளை, அதே போல ஓடச்செய்ய வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். 



அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், மீட்கும் இவ்வியக்கத்திற்கு தமிழக அரசின் முழு ஆதரவு இருக்கும் எனத் தெரிவித்தார். இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜும், நரேன் கார்த்திகேயனும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

பின்னர்,  நதிகளை மீட்கும் மாபெரும் பேரணியை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், அமைச்சர் வேலுமணி மற்றும் பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பத்நோர் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைக்க, கார் ஒட்டியபடி சத்குருபேரணியைத் துவங்கினார்.



சத்குருவுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் 5 கிலோ மீட்டருக்கு பேரணியில் பயணித்தார். செல்லும் வழி நெடுகிலும் பல ஊர்களில் மக்கள் மேளதாளத்துடன் பேரணியை வரவேற்று, தங்கள் உற்சாகத்தையும் ஆதரவையும் தெரிவித்தனர்.



நம் மண்வளத்தையும், நதியின் நீரோட்டத்தையும் அதிகரிக்கத் தேவையான தீர்வுகளை விஞ்ஞான ரீதியாக வரையறுத்து, விவசாயியின் வாழ்வில் சாதகமான பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்திட ஒரு சட்டத்தை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். இதை நடைமுறைக்கு கொண்டுவர அரசிற்கு ஒரு பரிந்துரை தயார் செய்யப்பட்டு வருகிறது. வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொருளாதார மற்றும் அரசியல் சட்ட நிபுணர்கள், ஆகியவர்களைக் கொண்ட ஒரு குழு இந்த பரிந்துரையை உருவாக்கி உள்ளனர். இதில் முக்கியமாக, நதிநெடுகிலும் இருபுறமும் குறைந்தது ஒரு கிலோ மீட்டர் அகலத்திற்கு மரங்கள் உருவாக்க வலியுறுத்தப்படும். மேலும் பல அம்சங்கள் இந்த பரிந்துரையில் அடங்கும். இது மத்திய அரசிடமும், மாநில முதல்வர்களிடமும் சமர்ப்பிக்கப்படும். அதே சமயம் பொதுமக்களின் பேராதரவிருந்தால் மட்டுமே இதுபோன்ற அரசியல் சட்டம் அமலாக்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, நேற்று (செப் 3) முதல் 30 நாட்களுக்கு நதிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பயணம் ஆரம்பித்துள்ளார். செப்டம்பர் 3ஆம் தேதி அவருடைய 60வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணியில் சத்குரு. நாடு முழுவதும் தாமே சுமார் 7000 கி.மீ. தூரம் வாகனம் ஓட்டிச் செல்வார். அவரோடு வழியில் பொதுமக்களும், பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்வார்கள். 



இந்தபயணம் அக்டோபர் 2ம் தேதி டெல்லியில் முடிவடையும். இந்த விழிப்புணர்வு பேரணி 16 மாநிலங்களின் வழியாக செல்லும். 20க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், 16 மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அப்போது, இந்த பரிந்துரை அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.

தமிழகத்தில் கோவை, கன்னியாகுமாரி, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அரசாங்க அதிகாரிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் கடந்த ஒரு மாதமாக இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.



Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...