கோவை பிரஸ் கிளப் சார்பில் பிரதி ஞாயிறன்று இளம் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது.
அதன்படி, 9-வது பயிற்சிப்பட்டறை இன்று (செப்டம்பர் 3) காலை கோவை பிரஸ் கிளப் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், தினமலர் நாளிதழ் தலைமை புகைப்படக் கலைஞர் சிவகுருநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'புகைப்பட செய்திகளும், கோணங்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- 'முந்தய காலகட்டத்தில் புகைப்பட கலைஞர்களின் பணி என்பது மிகவும் சிரமமானது. டிஜிட்டல் காமிராக்களின் அறிமுகமில்லாத காலத்தில் 'பிலிம் காமிரா' உதவியுடன் ஒரு புகைப்படத்தை கட்சிதமாக எடுத்து அதை அலுவலகத்தில் கொடுப்பது அவ்வளவு எளிதல்ல.
இன்றைய உலகில் ஒரு புகைப்படம் எடுப்பது என்பது மிக எளிதாகிவிட்டது. இச்சூழலில், ஒவ்வொரு புகைப்படக் கலைஞரும் மாறுபட்டு சிந்திக்க வேண்டும். புகைப்படம் எடுக்கும் கோணங்களில் சற்றே மாறுபட்டு சிந்திக்க வேண்டும்.
அதே போல், விளையாட்டு அல்லது ஆண்மீகம் தொடர்பான புகைப்படங்களை எடுக்க செல்லும் போது, அது தொடர்பான குறைந்தபட்ச புரிதல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்பொழுது தான், சம்மந்தப்பட்ட துறைக்கு ஏற்ப புகைப்படங்களை எடுக்க முடியும்.

புகைப்படம் எடுக்கச் செல்லும் நேரத்தில், ஒவ்வொரு புகைப்பட கலைஞரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் காமிராவை எடுத்து புகைப்படம் எடுப்பது என்பது சாத்தியப்படாத ஒன்று. பல நேரங்களில் அது நமக்கு ஆபத்தாக அமையக்கூடும்'. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கோவை பிரஸ் கிளப்-யின் பொருளாளர் சுப்பு சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசினை வழங்கி சிறப்பித்தார்.