மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கான புதிய முறையில் கேஎம்சிஎச் வெற்றி

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை, ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த முறை, சிறுநீரகவியல் துறை, விரிவான ஆராய்ச்சிக்குப்பின் ஒரு சிக்கலான பிரச்சனையை தீர்க்க புதிய வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.



ஒரு 18 வயது வாலிபன், வலியுடனும், வாந்தியுடனும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடப்பதற்கு கூட முடியாத நிலையில் இருந்த அவரை பரிசோதனை செய்தபோது, சிறுநீரக இயக்கம் மோசமாக இருந்தது தெரியவந்தது. கால்சியம் பற்றாக்குறையால் எலும்புகள் பலவீனமடைந்து, சிறுநீரகம் சுருங்கி, அதை மாற்ற வேண்டிய நிலையில் இருந்தது. உடனடியாக அவருக்கு டயாலிஸஸ் சிகிச்சையின் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டது. அவரது தாயின் ரத்தமும், அவரது ரத்தமும் ஒத்துபோனபோதிலும் அவரது தாய்க்கு சர்க்கரை வியாதி இருந்ததால் அவரால் சிறுநீரக தானம் தரமுடியாது. இருப்பினும் அவரது தந்தையின் சிறுநீரகம் நல்ல முறையில் இருந்தாலும், ரத்த வகை நோயாளியுடன் பொருந்தவில்லை.

ரத்த வகை பொருந்தாமல் இருப்பினும் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், சிறுவனுக்கு உள்ள தீய வகை எதிர் உயிரிகளை நீக்க, தீவிர பிளாஸ்மா மாற்று சிகிச்சை தொடரப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்மா மாற்று  சிகிச்சை  செய்வதால் த்தப்போக்கு அதிகம் எற்படும். இந்த நோயாளிக்கு பலமுறை தொடர்ந்து பிளாஸ்மா மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி தரும் இம்யூனோகுளோபின்களின் இழப்பு, தொற்றுநோய் வருவதற்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும். ரத்த தொற்றுநோயுடன் கூடிய இந்த நோயளிக்கு இம்யூனோகுளோபின் மற்றும் பிளாஸ்மா மாற்றம் செய்வது அதிக செலவை ஏற்படுத்தும். இத்தகைய பல பிரச்சனைகளால் அவர் கவலையடைந்தார். 

இத்தகைய ரத்த வகை பொருத்தமில்லா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில், அவருக்கு ’இம்யூனோ–அட்சார்ப்ஷன்’ எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தி கிரகித்தல் முறையை அறிவுறுத்தினோம். ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே உள்ள இந்த தொழில்நுட்பத்தில், உடலுக்கு தீய்மைவிளைவிக்கும் எதிர் உயிர்கள் மட்டும் நீக்கப்படும்  தன்மைக்கொண்டது. ரத்தப்போக்கு, தொற்றுநோய் அல்லது ரத்தப்பொருட்கள் நீக்கம் செய்ய வேண்டிய சிக்கல்கள் இல்லை. 

சட்டப்பூர்வமான நடைமுறைகளுக்குப்பின், ஒரு முறை நோய் எதிர்ப்பு சக்தி கிரகித்தில் சிகிச்சை தரப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான முறைகளுக்கு ஆய்வக காரணிகள் பொருத்தப்பட்டன. அவருக்கு அடுத்த நாளே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக அவரது சிறுநீரகம் செயல்பட துவங்கியது. ஒரு மாதத்துக்குப் பின் வழக்கமான முறையில் அவரது சிறுநீரகம் செயல்பட்டு வலி நீங்கி நடக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார், இன்னும் இரண்டு மாதங்களில் அவர் கல்லுாரிக்கு செல்லவிருக்கிறார். 



கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, சிறுநீரகவியல் துறை ஆலோசகர் டாக்டர் மங்கலகுமார் மற்றும் அவரது குழுவினரை பாராட்டினார். இதுகுறித்து நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், ஒருங்கிணைந்த தொடர்ச்சியான மருத்துவ கல்வி பெற்று வரும் மருத்துவம் சார்ந்த குழுக்கள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த பெரிதும் உதவியுள்ளது. சிக்கலான பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவியுள்ளது. கேஎம்சிஎச் மருத்துவமனையின் தரத்தை மேலும் உயரச் செய்து வருகிறது என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...