தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் ஊராட்சித்துறை செயலர் தெரிவித்ததாவது:-



தொடக்க நிலையிலேயே சுற்றுச் சூழலின் முழு சுகாதாரம் தூய்மை செய்தல், புகைபோக்கி கருவி மூலம் கொசு மருந்து அடித்தல், குடிநீரை குளோரினேசன் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கலாம்.

அனைத்துத் துறை அரசு வளாகங்களையும் தூய்மைப்படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் தங்களது ஊராட்சிகளுக்கு உட்பட்டுள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் தூய்மையாக உள்ளது என்று உறுதி செய்யப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் மண்டல அலுவலர்கள் மற்றும் குழு அமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களையும் கண்காணித்திட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயலாற்றிட வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களும் அவர்களது பணியினை உணர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். காய்ச்சல் பரவுவதற்கு குடிநீர் விநியோகமும் ஒரு காரணமாகும். குடிநீரை டிரம்களில் சேகரித்து வைப்பதன் மூலம் லார்வா புழுக்கள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுகிறது. எனவே, குடிநீரை சரியான நேரத்தில் விநியோகம் செய்து தேக்கி வைப்பதை தடுப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். மேலும், சுகாதார துறை விரைவான குழுக்கள் அமைக்கப்பட்டு வட்டார அளவில் கண்காணிக்கப்பட வேண்டும். அக்குழுவானது ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும் மாலை தலைமை அலுவலர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சுழற்சி முறையில் 6 நாட்களும் வட்டாரங்களில் பணிகள் மேற்கொள்வதன் மூலம் காய்ச்சலை தடுக்க முடியும்.

மேலும், திட்ட இயக்குநரால் (மகளிர் திட்டம்) சுகாதாரத் துறையுடன் மகளிர் சுய உதவிக் குழ உறுப்பினர்களை அணி திரட்டி இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, வணிவரித்துறை இணை ஆணையர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, பொள்ளாச்சி சாராட்சியர் காயத்ரி கிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பானுமதி, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...