கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலத்துறை, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டம்பட்டி மற்றும் போதவாடி, பொட்டையாண்டிபுரம்பு பெரியநாயக்கன்பாளயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அசோகபுரம், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடவள்ளி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜல்லிபட்டி, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையம்பாளையம், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆச்சிபட்டி, பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊஞ்சவேலம்பட்டி மற்றும் சின்னாம்பாளையம், சோளபாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வரும் ஆகஸ்ட் 21 முதல் 30ம் தேதி வரை சமூகதணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேற்படி சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 30 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.