பாட்டிலோடு வந்தவரால் பரபரப்பு- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரக்க பரக்க ஓடிய காவலர்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளிப்பர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சூலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் பட்டா பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயற்சித்தனர். அவர்களை அங்கிருந்து காவலர்கள் தடுத்து இச்செயலுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருபர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று வழக்கம் போல் எல்லாருடைய உடைமைகளையும் சோதித்து காவலர்கள் அனுமதி அளித்துக் கொண்டிருந்தபோது பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஒரு பாட்டிலில் குடிநீருடன் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.



அவர் கொண்டு வந்த பாட்டிலில் மண்ணெண்ணை இருப்பதாகக் கருதி அங்கு பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆணையர் மற்றும் காவலர்கள் ஓடியதால் அவர்களுக்கு பின்னாலேயே பத்திரிகையாளர்களும் சென்றனர். பின்னர் லட்சுமணன் கொண்டு வந்திருந்தது குடி தண்ணீர் என்பதைத் தெரிந்த காவலர்கள் அசடு வழிந்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...