கேஎம்சிஎச் சார்பில் இரண்டாவது உலக ரீனியம் காங்கிரஸ் மாநாடு

உலகில் உள்ள நோயாளிகள் கல்லீரல் புற்றுநோய்க்கு ரேடியோ கஞ்சுகேட் மருத்துவ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இன்று இரண்டாவது உலக ரீனியம் காங்கிரஸ் என்ற கருத்தரங்கை நடத்தியது. பயிற்சி பெறுவோருக்கும் பங்கேற்போருக்கும் இடையே கூட்டு முயற்சி ஆராய்ச்சிகள் நடத்திடவும் இந்த கருத்தரங்கு மிகவும் உபயோகமாக அமைந்தது. உலக அளவில் 22 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்து பங்கேற்றனர்.



கேஎம்சிஎச் மருத்துவமனையில் அணு மருத்துவ துறையானது ரீனியம் 188 லிபிடால் என்னும் சிகிச்சை முறையை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து ஒரு மாற்று வழியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரேடியோ கஞ்சுகேட்கள் மலிவானது மற்றும் புற்றுநோயை குணப்படுத்துவதில் சிறந்ததாக விளங்குகிறது.

அஜித் ஷின்டோ தலைமையில் இயங்கும் இந்த அணுமருத்துவ பிரிவானது இந்த சிகிச்சை முறையை 2015-ஆம் ஆண்டிலிருந்தே செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சிகிச்சை செயல்படும் மையங்களில் கேஎம்சிஎச் ஒன்றாக விளங்குகிறது.

இந்த கருத்தரங்கில் கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிசாமி பேசியதாவது:- புதுமையான மற்றும் அதிநவீன தொழில் நுட்பத்தை ஏற்று செயல்படுத்துவதில் கேஎம்சிஎச் எப்போதுமே முன்னணியில் இருக்கிறது. அஞ்சத்தக்க கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்த அணுமருத்துவ சிகிச்சையை கேஎம்சிஎச் மருத்துவர்கள் கையாளும் விதம் பெருமிதத்திற்குறியது. உயர்ந்த விரைவான பலன் அளிக்கக்கூடிய ரீனியம் போன்ற சிகிச்சை முறைகளை உருவாக்கிடும் முயற்சிகளுக்கு ஆதரவை கொடுப்பதில் கேஎம்சிஎச் மருத்துவமனை உறுதியாக உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, தலைமை விருந்தினராக பங்கேற்ற ஸ்ரீலங்காவின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் பைசல் காசிம் பேசுகையில், தன்னுடைய நாட்டிலும் இது போன்ற முன்னேறிய சிகிச்சை முறைகள் தன் நாட்டு மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்று அவருடைய விருப்பத்தை வெளியிட்டார். இதற்கு தேவையான அனுபவம், பயிற்சி மற்றும் வல்லுநர்கள் ஆகியவற்றை கேஎம்சிஎச் மருத்துவமனை கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் செயல் இயக்குநர் கே.ஷூக்லா, ரேடியோ நியூக்ளிட் சிகிச்சை துறையில் பலமான கட்டமைப்பும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றபடியால் அணு மருத்துவ சிகிச்சை மையங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தினால் பெரும்பாலான புற்றுநோயாளிகள் பலன் பெறுவார்கள் என்று கூறினார்.

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் ரேடியாலஜி பிரிவின் தலைவர் மருத்துவர் மாத்தியூ செரியன், பெரும் எண்ணிக்கையிலான புற்று நோயாளிகள் பயன்பெறுவதற்கு இது போன்ற அணு மருத்துவ சிகிச்சை மையங்கள் நாடு முழுவதும் நிறுவப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 250 அணு மருத்துவ விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த கருத்தரங்கில் பங்கு கொண்டனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...