ஈஷா அவுட்ரீச் சார்பில் தேவராயபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்


ஈஷா அவுட்ரீச், சோழா குழுமம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் (ஆகஸ்ட் 13) வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஈஷா யோகா மையம் அருகில் உள்ள தேவராயபுரம் கிராமத்தின் சமுதாய கூடத்தில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கண்களில் புரை உண்டாகுதல், மாறுகண், நீர்அழுத்த நோய், மாலைக்கண், சீழ் மற்றும் நீர்வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற பிரச்சனைகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்படும்.

கண்புரை நோயாளிகள் முகாமிலிருந்து கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவார்கள். இவர்களுக்கு ஐஓஐ லென்ஸ், சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வைக் கோளாறு இருப்பவர்களுக்கு மிக குறைந்த விலையில் தரமான கண்கண்ணாடி வழங்கப்படும்.

முகாமிற்கு வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையின் நகல் எடுத்துவர வேண்டும். மேலும் வீட்டு முகவரியை எழுதி எடுத்துவர வேண்டும்.

முகாமில் கலந்து கொள்ளவும் மேலும் விவரங்களுக்கு 09442590021, 0422-2651298 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...