கோவை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பசேரி ஊராட்சி நல்லூர்பாளையம் பகுதியில் பந்தலில் விளையக் கூடிய காய்களுக்கு இயற்கை முறை மருந்து அதிக விளைச்சலை அளிக்கும் எனக் கூறி மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் அளித்த மருந்தினால் ஐந்தரை ஏக்கர் விவசாய நிலத்தில் பயிறிடபட்டிருந்த காய்கறிகள் முற்றிலும் காய்ந்து விட்டதாகக் கூறி இன்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பசேரி ஊராட்சி நல்லூர்பாளையம் பகுதியில் பந்தலில் விளையக் கூடிய பாகற்காய், புடலங்காய்களுக்கு இயற்கை முறை மருந்து உள்ளதாகவும், இந்த மருத்தை தெளித்தால் அதிக விளைச்சலை அளிக்கும் என கூறி மதுரையை தலைமையிடமாக கொண்ட சத்தியம் பயோ என்ற நிறுவனம் 2000 ரூபாய்க்கான மருந்துகளை விற்று உள்ளனர்.
விவசாய நிலங்களில் இந்த மருந்த்தை தெளித்த 3 நாட்களுக்குள் பயிறிடபட்டிருந்த பயிர்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டது. இது குறித்து அந்த நிறுவனத்தின் பிரதிநிதியிடம் முறையிட்டபோது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஐந்தரை ஏக்கர் நிலத்தில் பயிரிடபட்ட காய்கள் அனைத்தும் கருகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியை தொடர்பு கொண்டபோது தங்கது மருந்தால் தான் பயிர்கள் காய்ந்து விட்டது என விவசாயிகளிடம் எழுதி கொடுத்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களை மிரட்டி கடிதம் எழுதி வாங்கியதாக அந்த நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கருகிய பயிர்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.