தமிழ்நாடு பொதுக்கட்டிடங்கள் உரிமச் சட்ட விதிகளின் படி பொதுக்கட்டிடங்களின் உரிமையாளர்கள் அல்லது குத்தகைதாரர்கள், உரிமதாரர், மேலாளர், அறங்காவலர், முதல்வர், செயலாளர் என அக்கட்டிடத்திற்குப் பொறுப்புள்ள நபர்கள், பொது கட்டிட உரிமம் வழங்கக் கோரி தொடர்புடைய வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தகைய பொதுக் கட்டிடங்களுக்கு அவற்றின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு பொதுக்கட்டிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்திற்குள் செயல்பட்டு வரும் பொதுக்கட்டிடங்களுக்கு இதுவரை உரிமம் பெறாதவர்கள் உரிமம் பெற்ற கட்டிட பொறியாளரின் சான்று, தீயனைப்புத் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் சுகாதாரச் சான்று ஆகியவற்றுடன் தொடர்புடைய வட்டாட்சியருக்கு உரிய கட்டணத்தைச் சேலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், உடனடியாக உரிமம் பெற்று அதன் பின்னரே அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, பொதுக்கட்டிட உரிமம் பெற்றுள்ள நபர்கள் உரிய காலக்கெடுவிற்குள் அதனைப் புதுப்பித்து நடப்பில் வைத்திருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.