News
கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
SimpliCity News Team · 04 May 2026
Coimbatore: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) முன்னிலை பெற்று வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், தற்போது 5 தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர், கோவை வடக்கு, சூலூர், கவுண்டம்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்கள் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி (GCT) கல்லூரி முன்பு திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ‘தளபதி வாழ்க’ என முழக்கமிட்டு, இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கோவையின் முக்கிய தொகுதிகளில் த.வெ.க முன்னிலை பெற்றிருப்பது, தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
tvktamilaga vettri kazhagamcoimbatoreassembly electionvote countinggct collegecelebrationselection resultsthalapathyvijay
Related stories
News
“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore
14 May 2026
News
TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar
13 May 2026
News
திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை
12 May 2026
News
“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam
06 May 2026