அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின கீழ் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின கீழ் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சி பகுதிகளில் நகராட்சிகளின் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பட்டியல் தயார் செய்ய உத்தேசிகப்பட்டுள்ளது.

எனவே பயனாளிகளகிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கு வருகிற ஆகஸ்ட் 4 முதல் 5ம் தேதி வரை கோவை மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் நகராட்சிகள் இணைந்து சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இச்சிறப்பு முகாமில் இந்தியாவில் வெறு எந்தப் பகுதியிலும் கான்கிரீட் வீடு இல்லாத நலிவடைந்த பிரிவின் கீழ் (மாத வருமானம் ரூ.25.000) வாழும் குடும்பங்கள் கீழ்க்கண்ட முறைகளில் ஒன்றில் பயன் பெறலாம்.

1) பயனாளிகள் தங்களுக்கு சொந்தமான மனையில் புதிய கான்கிரீட் குடியிருப்புகள் (300 சதுர அடி பரப்பளவு) கட்டுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத் தொகையான ரூ.2.10 இலட்சங்கள் பெற்று தாங்களாகவே வீடு கட்டிக் கொள்ளலாம்.

2) அரசுக்குச் சொந்தமான ஆட்சேபகரமான நிலங்களில் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு பயனாளிகளின் பங்களிப்புடன் அரசால் கட்டப்படும் குடியிருப்புகளில்  ஒதுக்கீடு பெறலாம்.

3) வங்கிகள் மூலமாக 6.5 சதவிகிதம் வட்டிக்கான மானியத்திலும் கடன் பெற்று வீடுகள் கட்டவும் மற்றும் வீடுகள் வாங்கிக் கொள்ளவும் விரும்பும் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

எனவெ பயனாளிகள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் நகராட்சிகள் இணைந்து நடத்தும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இலவசமாக விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...