நீலகிரியில் பிறந்த குழந்தைகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் ‘அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்’- நன்றி தெரிவித்த தாய்மார்கள்

தமிழக அரசு தமிழகத்திலுள்ள தாய்மார்கள், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழ பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மக்கள் தரமான மருத்துவ சேவையினை பெறுவதற்கு ஏற்ற வகையில் பல சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தை மற்ற மாநிலங்களை விட முன்னோடி மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

அதன்படி மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பெண்களுக்கு அறிவித்த திட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், மிக்சி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு வழங்குதல், திருமண உதவித்தொகை, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மாதவிடாய் சுகாதார திட்டம், நகரும் மருத்துவமனை திட்டம், பெண்களுக்கு திருமண நிதியுதவி, முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை என பல்வேறு திட்டங்கள் ஆகும்.

மேலும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்த மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகும் தாயும் சேயும் ஆரோக்கியமாக வாழ கடந்த 07.09.2015 அன்று “அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்” என்ற திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அரசு சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனையில், 12.09.2015 அன்று முதல் “அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்” வழங்கப்பட்டது. பின்பு அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்; “அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்” வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.1000 மதிப்பிலான “அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்” வழங்கப்பட்டு வருகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் 2014-2015 ஆம் ஆண்டு பிறந்த 4503 குழந்தைகளுக்கும், 2015-2016 ஆம் ஆண்டு பிறந்த 3158 குழந்தைகளுக்கும், 2016-2017 ஆம் ஆண்டு பிறந்த 3030 குழந்தைகளுக்கும், 2017-2018 ஆம் ஆண்டில் ஏப்ரல் 2017 முதல் ஜூன் 2017 வரை  பிறந்த 931 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 11622 பிறந்த குழந்தைகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் “அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்” வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தை நல பரிசுப் பெட்டகத்தில் குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு 100 சதவீதம் பருத்தியினால் நெய்யப்பட்ட பராமரிப்பு துண்டு, மென்மையான 100 சதவீதம் பருத்தியில் நெய்யப்பட்ட ஆடை, படுக்கை, கொசுவலை, நாப்கின்கள்; 100 மில்லி லிட்டர் குழந்தை எண்ணெய், 20 மில்லி லிட்டர் ஷாம்பூ, 100 கிராம் குளியல் சோப்பு, சோப்பு பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, 250 மிலி அளவு கைகழுவும் திரவம், 100 கிராம் எடையுள்ள குளியல் சோப்பு, “சௌபாக்கியா” சுண்டிலேகியம் இவை அனைத்து பொருட்களையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள ஒரு பெட்டகமும் மொத்தம் 16 வகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த கோத்தகிரி நெட்டக்கல் பகுதியை சேர்ந்த மாலா கூறுகையில், “எனது கணவர் பெயர் ராஜ்குமார். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த என்னை பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்தது. எனக்கும் எனது குழந்தைக்கும் சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.



எனது குழந்தையை சிறப்பாக பாராமரிக்க தமிழக அரசு ‘அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்’ வழங்கும் திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ரூ.1000 மதிப்பிலான 16 பொருட்கள் அடங்கிய “அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்” வழங்கினார்கள். இதன் மூலம் எனது குழந்தையை நல்ல முறையில் பாராமரிக்க மிகவும் வசதியாக உள்ளது. எனது குழந்தையை பராமரிக்க பரிசு பெட்டகம் வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி” என்றார்.

“என் பெயர் சோனியா எனது கணவர் பெயர் அஜீத்குமார். நாங்கள் கோத்தகிரி நெடுகுளா பகுதியில் வசித்து வருகிறோம். என் கணவர் தோட்ட வேலை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது முதல் பிரசவம். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எனக்கு குழந்தை பிறந்தது. எனது குழந்தையை பாராமரிக்க அரசு  குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தின்கீழ் எனது குழந்தைக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கினார்கள். இதன் மூலம் எனது குழந்தையை நல்ல முறையில் பாராமரிக்க மிகவும் வசதியாக உள்ளது என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...