வெளிநாட்டில் வேலை, வங்கிக் கடன் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டவரை பொதுமக்களே தேடிச்சென்று சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம், சரவணம்பட்டி அரகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர், அப்பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், வங்கிக் கடன், தனி நபர்க் கடன் பெற்றுத் தருவதாகவும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அதனை நம்பி வந்த மக்களிடம் வங்கிக் கடன் பெற சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி பெற்றுள்ளார். மேலும், மக்களிடம் இருந்து வங்கி செக் இதழையும், குறிப்பிட்ட அளவிற்கு கமிஷனாக பெருந்தொகையினையும் பெற்றுள்ளார். இவ்வாறு 30 முதல் 40-க்கும் மேற்பட்ட மக்கள் சண்முகத்திடம் பணம் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் இவர் ஒரு செக் இதழில் குறிப்பிட்ட தொகையிட்டு வங்கிக் கடன் வந்துவிட்டாக திருப்பி வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அந்த செக் இதழை வங்கியில் செலுத்திய பொதுமக்களிம் இது போலியானவை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து சண்முகம் தங்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனிடையே சண்முகம் தலைமைவானார். தொடர்ந்து, சண்முகம் குடியிருந்த விநாயகபுரம் பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களின் காட்சிகளைக் கொண்டு ஏமாற்றமடைந்த பொதுமக்களே விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சண்முகம் வீட்டினை காலிசெய்து செல்லும் போது பயன்படுத்தப்பட்ட வாகன எண்ணைக் கொண்டு ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்கையில் அவர் கோபியில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, கோபி சென்ற பொதுமக்கள் சண்முகத்தின் வீட்டில் வைத்து அவரை சிறைபிடித்து பின், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவரிடம் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த பொதுமக்கள் கூறுகையில், சண்முகம் மற்றும அவரது மனைவி ஆகிய இருவரும் இணைந்தே மோசடியில் ஈடுபட்டனர். கோவையில் மட்டும் 30 முதல் 40 பேரிடம் இவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். பிற மாவட்டங்களில் இதுபோன்று ஏதேனும் முறைகேட்டில் அவர் ஈடுபட்டுள்ளாரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தனர்.