வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெரும் வகையில் இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளன.
நன்கொடை பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதை அறிந்த மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ அமைப்புகள் நிதி உதவி பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது. மேலும், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதை உள்துறை அமைச்சகம் கண்டறிந்தது. இதையடுத்து கடந்த 2011-2015 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை கடந்த மே மாத இறுதிக்குள் சமர்பிக்குமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
ஆனால், இது வரை 5 ஆயிரத்து 922 தன்னார்வ அமைப்புகள் தங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, எப்ஆர்சிஏ (Foreign Contribution Regulation Act) விதியின் படி ‘உங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?’ என்ற கேள்வியையும் உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ளது.
இதற்கு வரும் 23ம் தேதிக்குள் பதில் அளிக்காத தன்னார்வ அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.