நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. குன்னூர் நகர தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று கொடியேற்றி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக வட்டாரத்தில் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. மர்மமான முறையிலும் தற்கொலைகள் நடைபெறுவதால் இதனை சிபிஜ விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரியினால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு, ஜவுளி, ஓட்டல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அனைத்து மக்களிடையே கருத்து கேட்க வேண்டும்' என தெரிவித்தார்.
இதில் குன்னூர் நகர தலைவர் ஆனந்த குமார், மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.