கோவை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல்களை இணையதள முகவரியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவறை - கோவை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவறையில் 1871 முதல் 2015-ம் வருடம் வரையிலான பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2011-ம் வருடம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகள் பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
2016 மற்றும் 2017-ம் வருடத்தில் பிறப்பு, இறப்பு பதிவேடுகள் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறப்பு, இறப்பு பதிவு சம்பந்தமான சான்றிதழ்கள் கோவை மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளில் இருந்து 1981 முதல் 2015 வரையிலான பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் (www.ccmc.gov.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், 2011-ம் வருடம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சி பேரூராட்சிகள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் 2011 முதல் 2015 வரையிலான வருடத்திற்குண்டான சான்றிதழ்கள் (www.ccmc.gov.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் 1981 முதல் 2015 வரையிலான வருடங்களுக்கான சான்றிதழ்கள் இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வேண்டுவோர் தபால் தலை ஒட்டிகள் (Self Enveloped Cover) இணைத்து விண்ணப்பித்தால் தபால் மூலம் அனுப்பப்படும். மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கூரியர் மூலம் வேண்டும் என விண்ணப்பித்தால் கூரியர் தபால் மூலம் சான்றிதழ்கள் அனுப்பப்படும்.
கோவை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் சிஎம்ஏ அலுவலக மென்பொருள் கொண்டு பயன்படுத்துவதில்லை. கோவை மாநகராட்சிக்கென தனியான மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.