வாக்களிக்கும் முறை குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள சுகுணா ரிப் மெட்ரிக் பள்ளியில் மாணவர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் டிஜிட்டல் முறையில் வாக்களித்தனர். 100 சதவீத வாக்குப்பதிவு என்பதை இலக்காக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவியர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 649 மாணவ மாணவிகள், 79 ஆசிரியர்கள், 5 நிர்வாகிகள் உள்ள இப்பள்ளியில் மாணவர் தலைவர், துணை தலைவர், கலை துறை செயலர் மற்றும் விளையாட்டு துறை செயலர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கான தேர்தல் டிஜிட்டல் முறையில் ஐ பேட் மூலம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலின் போது வாக்களிக்கும் முறை பின்பற்றப்பட்டது. 45 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 18 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்போது மாணவ மாணவிகளின் கை விரல்களில் மை வைக்கப்பட்டு வாக்காளர் அடையாள சீட்டு சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆர்வமுடன் வாக்களித்த மாணவ மாணவியர் 18 வயது நிரம்பியவர்களே வாக்களிக்க தகுதியானவர்கள் என்றுள்ள சூழலில் தாங்கள் வாக்களித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.