கோவை, ஒண்டிப்புதூரை அடுத்த சிவலிங்கபுரம் 59வது வட்டம் சக்தி நகரில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. ஸ்மார்ட் சிட்டியான கோவையில் அடிப்படை வசதிகளை கூட செய்யாமல் இருக்கும் மாநகராட்சியை கண்டித்து சிவலிங்கபுரம் பகுதி மக்கள் இன்று காலை முதல் சக்தி நகரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

தெருக்களில் கருப்பு கொடியோடு நடைபெறும் இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் வந்து அடிப்படை வசதிகள் செய்து தருவதாய் உத்திரவாதம் அளிக்கும் வரையில் இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.