ஜிஎஸ்டி அறிவிப்பால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினரும், எம்.பி. டி.கே.ரங்கராஜன் பேட்டி

ஜிஎஸ்டி அறிவிப்பால் வர்த்தகர்கள், வியாபாரிகள், கைத் தறி விசைத்தறி தொழில்கள், பஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜிஎஸ்டி முழுமையாக அமலாக்கப்பட்ட பின்னர் பாதிப்பு இன்னும் அதிகமாகும் எனவும் விலைவாசி உயரும் என சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கோவையில் பேட்டியளித்துள்ளார். 

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்ட சிபிஎம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரத்தை தூண்டும் முயற்சியில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபடுகின்றன. 

இச்சம்பவத்தை கண்டித்து உடனடியாக கண்டன அறிக்கை வெளியிட்ட திமுக, திராவிட கழகம் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களுக்கும் நன்றிகள். முக்கிய பிரச்சனைகளில் அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும். கோவை நகரை பொறுத்தவரை காவல்துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாஜக-விற்கு எதிரான கட்சி சிபிஎம் என்பதை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அடையாளப்படுத்தி இருக்கின்றார். கேரளாவும், திரிபுராவும் அடுத்த இலக்கு என பாஜக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதே பாஜக தான்.

ஜிஎஸ்டி-யால் வர்த்தகர்கள், வியாபாரிகள், கைத்தறி, விசைத்தறி தொழில்கள், பஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பின்னர் பாதிப்பு இன்னும் அதிகமாகும், விலைவாசியும் உயரும். இதற்கு எதிரான போராட்டங்களில் மக்களுடன் இணைந்து சிபிஎம் போராட்டம் நடத்தும். தமிழகத்தில் அரசு நடைபெறுகின்றதா என்பதே சந்தேகமாக இருக்கின்றது. தமிழக சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லை என்ற வருத்தம் இப்போது பலருக்கு ஏற்பட்டு உள்ளது. 

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றது என்பதை பொறுத்து இருந்து பார்கலாம். ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும்" என்றார்.

இதைத்தொடர்ந்து, திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் பெண்ணை தாக்கிய ஏ.டி.எஸ்-பிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருப்பது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு, விசாரணைக்கும் பதவி உயர்விற்கும் தொடர்பு இல்லை என அரசு தரப்பில் கூறப்படுகிறது. விசாரணை முடிவை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். 

மதுக்கடைக்கு எதிராக சாமளாபுரம் மக்கள் நடத்தும் போராட்டம் வரவேற்கத்தக்கது. தங்கள் கட்சி அதை வரவேற்கிறது. கேரளா, கோவா, பாண்டிச்சேரி மாநிலங்களில் வருவாய் என்பது மதுவால் மட்டுமே உள்ளது. கேரளாவில் மது விற்பனை குறைத்ததால் வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்து போனதுடன் வருவாயும் குறைந்து போனது. அதன் காரணமாகவே மீண்டும் கேரளாவில் மதுபான விற்பனை துவங்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து, மது விவகாரத்தில் தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு, கேரளத்தில் ஒரு நிலைப்பாடு என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, இந்தியா ஒரு நாடல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருவித தேவை இருக்கிறது. தமிழகம், கேரளம் என்பதை மட்டும் எடுத்து பேசுவது சரியல்ல. கேரள அரசின் மதுக்கொள்கை முடிவுகளை பத்திரிகைகள் பாராட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...