மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இம்மையத்தின் சார்பில் பெண்களுக்கான பூத்தொடுக்கும் போட்டி மற்றும் சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

பாஜக-வின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தொடுக்கும் போட்டியில் பங்கேற்றனர். பின்னர், கனரா வங்கி சார்பில் பெண்களுக்கான சிறு தொழில் கடனுதவி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பெண்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணரும் விதமாக இன்று பூத்தொடுக்கும் போட்டி நடைபெறுகிறது. மனதை ஒருநிலைப்படுத்தும் விதமான இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் பெண்கள், தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுகின்றனர். போட்டியில் வெற்றி பெரும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தொடர்ந்து, கனரா வங்கியின் சார்பில் பெண்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சிறு தொழில்முனையும் பெண்களை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.