மாடுகளை அனுமதியின்றி விற்கக்கூடாது, இறைச்சிக்காக மாடுகளை வெட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிரிப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிட முன்னேற்ற கழகத்தினர் இன்று மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாட்டுக்கறி திருவிழா என்னும் பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கு. இராமகிருட்டிணன் துவக்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாட்டுக்கறி உண்டு மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.