இன்று சுற்றுச்சூழல் தினம் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையால் கொண்டாடப்பட்டது.
இத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சுற்றுசூழல் தினம், இந்த ஆண்டு "இயற்கையோடு மக்கள்" என்ற கருத்தை வலியுறுத்தி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியரும், பேச்சாளருமான ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
காலை 10 மணியளவில் அண்ணா அரங்கத்தின் முன் வாகனப் புகைப் பரிசோதனை நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கு.இராமசாமியும், சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனும் துவக்கி வைத்தனர். வாகனப்புகை மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இருநூறுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு இலவசமாக வாகனப்புகை பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பொன்விழா அரங்கத்தில் விழா தொடர்ந்தது. விழாவின் தொடக்கத்தில் பேசிய இயற்கை மேலாண்மை இயக்கத்தின் தனி அலுவலர் து.ஜவஹர், விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக துணை வேந்தர் கு.இராமசாமி தலைமை வகித்து பேசினார்.
சிறப்பு விருந்தினர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசுகையில், ஒரு துளி நீரையும் மற்றும் ஒரு பருக்கை அளவு உணவையும் வீணாக்காமல் செயல்படுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். பழமையை உணர்ந்து அதனை புதுமையில் புகுத்தினால் மட்டுமே வெற்றி என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடான பழமொழிகளை கற்றுத்தர வலியுறுத்தினார்.
இறுதியாக விழாவை ஒருங்கிணைத்த சுற்றுச்சூழல் துறையின் தலைவர் சு.ஆவுடைநாயகம் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த மிதிவண்டி பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முழக்கங்களைக் கொண்ட அறிவிப்பு பலகைகளை ஏந்தியபடி மாணவர்கள் அண்ணா அரங்கம் முன் தொடங்கி இராபர்ட்சன் சாலை வழியாகச் சென்று மேற்கு சம்பந்தம் சாலை, புண்ணியகோடி வீதி, கௌலி ப்ரவுன் ரோடு, லாலி ரோடு, தாவரவியல் தோட்ட வாயில் வழியாகச் சுற்றுசூழல் அறிவியல் துறையை வந்தடைந்தனர்.
மேலும், புவி வெப்பமயமாதலைப் பற்றியும், எரிபோருள் சிக்கனத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று பல்கலைக் கழகத்தினுள் கார் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பல்கலைக் கழகம் சார்பாக "கார் ப்ரீ டே" அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக பல்கலைக் கழக துணைவேந்தரும், சிறப்பு விருந்தினரும் நமது நாட்டு மரங்களான வேங்கை, இலுப்பை, மகிழம் மற்றும் புங்கம் மரங்களை நட்டனர். மேலும், மறைந்த முன்னாள் மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தேவே அவர்களின் நினைவாகவும் மரக்கன்றுகள் நடப்பட்டது.