ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு மாநகராட்சிக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தும் தனியார் நிறுவனங்கள்- மாநகராட்சியின் நடவடிக்கை என்ன ?


கோவை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட 1 முதல் 100 வார்டுகளில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அனுமதியற்ற கட்டிடம் மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம் முதல் இன்றுவரை ரூபாய் 382.09 கோடி மதிப்பிலான 39.1 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



ஆனால், பொது ஒதுக்கீடு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவரின் பெயரையோ? முகவரியோ? பற்றிய எந்த முழுமையான தகவலையும் மாநகராட்சி நிர்வாகம் வெளியிடவில்லை.

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மாநகராட்சி இதுபோன்ற செயல்களில் தாமதப்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக கோவை மாநகராட்சியில் வசிக்கும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.



இதுகுறித்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், கோவை திருச்சி சாலை அருகில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 63-வது வார்டுக்குட்பட்ட திரு நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 41. 3 சென்ட் ரிசர்வ் சைட் பூங்கா ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தை பிரபல கல்யாண மண்டப உரிமையாளர்கள் ஆக்கிரமித்து டைனிங் ஹால் அமைத்து பல வருடங்களாக பயன்படுத்திக் கொண்டு பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். இதற்கும் மாநகராட்சி அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது" என்றார்.



இது குறித்து கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் விமலா கூறுகையில், இந்த ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வு மேற்கொண்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை கல்யாண மண்டப உரிமையாளர்கள் ஆக்கிரமித்து டைனிங் ஹால் கட்டியிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, உரிய ஆவணத்தை தயார்படுத்தி மாநகராட்சி அலுவலர்களின் அனுமதியுடன் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேற்படி, மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடம் 41. 3 சென்ட் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் தகவல் கொடுத்தும் நகரமைப்பு அலுவலர்கள் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

எனவே, இதனை உடனடியாக கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாரந்தோறும் ரிசர்வ் சைட்களை மீட்பது குறித்த முழுமையான தகவலை மாநகராட்சி சார்பில் வெளியிட வேண்டும். மேற்படி பூங்கா இடத்தையும் மீட்க அதிகாரிகளுக்கு உத்திரவிட வழங்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...