தமிழகத்தில் மலிவு விலை அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் மலிவு விலை அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல்  எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை  விட குறைந்த அளவு சிமெண்ட்டையே வழங்குவதாகவும் அமைச்சர் வேலுமணி  தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் இன்று  கோவை வந்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வரவேற்றனர். பின்னர் முதல்வர் கார் மூலம் சேலம் சென்றார். பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து  வருகின்றது என்றார்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற 100 நாட்களில் எண்ணற்ற சாதனைகளை தமிழக அரசு நிகழ்ததி இருக்கன்றது என தெரிவித்தார்.மேலும் லாரிகள் மூலம் 6700 நடை குடிநீர்  சென்னையில் உள்ள மக்களுக்கு  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல்  எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை  விட குறைவாகவே சிமெண்ட் வழங்குவதாகவும் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் உருவப்படம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி,எதிர்கட்சிகளுக்கு தங்கள் குற்றப்பின்ணனி குறித்தும் தெரியும் எனவும் சட்டப்படி ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...