கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வாரம் முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Coimbatore: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகே அமைந்துள்ள பரளிக்காடு பகுதி, காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான சூழல் சுற்றுலா மையமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதி, கோவை காந்திபுரத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காரமடையில் இருந்து 30 கிலோமீட்டரும் தொலைவில் அமைந்துள்ளது.




காரமடை வனத்துறை மற்றும் பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இந்த சூழல் சுற்றுலா, சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பொதுவாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.




பரளிக்காடு சூழல் சுற்றுலாவின் முக்கிய அம்சங்களாக பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவுகள், அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல், வனப்பகுதியில் நடைப்பயணம் மற்றும் பழங்குடியினரின் கலாசார நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவு வகைகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.




கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் இயற்கை மற்றும் நீர்நிலைகள் அமைந்த பகுதிகளுக்கு அதிகம் சென்று வருகின்றனர். இதையடுத்து, மே 1 முதல் மே 31 வரை தினமும் பரளிக்காடு சூழல் சுற்றுலா இயக்கப்படும் என காரமடை வனச்சரகர் அறிவித்திருந்தார். இதனால், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.




இந்நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரளிக்காடு சூழல் சுற்றுலா இந்த வாரம் முழுவதும் தற்காலிகமாக மூடப்படுவதாக காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை சூழ்நிலை சாதகமான பிறகு மீண்டும் சூழல் சுற்றுலா தொடங்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...