கோவை மக்களின் தாகம் தீர்க்க களமிறங்கிய ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம்-யின் "தாகம் தீர்ப்போம்"

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரேடியோ சிட்டி 91.1 பொழுதுபோக்கிற்கான பாடல்களை மட்டும் ஒளிபரப்பாமல் தனது பல்வேறு செயல்பாடுகள் மூலம் நாடி நரம்பு எல்லாம் கோவை சிட்டி என்றடிப்படையில் மக்களுக்கு சேவையினையும் வழங்கி வருகிறது. 



இந்நிலையில், தமிழகம் முழுவதும் நிலவி வரும் வறட்சியால் மக்கள் குடிக்க நீரின்றி தவித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் அவை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றுசேர்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும், வசதிபடைத்தோர், நடுத்தர வர்க்கத்தினர் விலைகொடுத்து லாரி உள்ளிட்டவற்றின் மூலம் தண்ணீரை பெற்று விடுகின்றனர். ஆனால், அடிமட்ட மக்கள், குடிசைப்பகுதி மக்களால் அவ்வாறு விலைகொடுத்து நீரை வாங்கும் நிலை இல்லாமலேயே உள்ளது.

இந்நிலையில் கோவை மக்களின் தாகம் தீர்க்க களமிறங்கியுள்ளது ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம். இதற்காக "தாகம் தீர்ப்போம்" என்னும் திட்டத்தை துவங்கியுள்ள ரேடியோ சிட்டி அடிமட்ட, குடிசைவாசிகள் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிப்பதே இத்திட்டமாகும். 

இதுகுறித்து, ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம் மண்டல திட்ட இயக்குநர் கே.பிரபு கூறுகையில், தற்போது தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வரும் நிலையில் கோவை உள்ளிட்ட பெரிய மாநகரகங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகளவில் நிலவி வருகிறது. இதனை போக்க "தாகம் தீர்ப்போம்" என்னும் திட்டம் துவங்கப்பட்டு அதற்காக 7200 911 911 என்னும் வாட்ஸ்அப் எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு தங்கள் பகுதியில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து தகவல் அளிக்கும் பட்சத்தில் அப்பகுதிக்கு தாகம் தீர்ப்போம் குழுவினர் சென்று உண்மைநிலையினை கண்டறிவர். இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு தாகம் தீர்ப்போம் குழுவினர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். எங்களுடன் சியாம் சுந்தரம் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனத்தினர் இணைந்து மக்களுக்கு தேவையான தண்ணீரினை வழங்கி வருகின்றனர்.

இத்திட்டத்தினை தற்போது 91 பகுதியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, நேற்று (மே 11) கே.கே.புதூர் பகுதியில் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்தை வரும் காலங்களில் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் செயல்படுத்த உள்ளோம்" என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...