குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி புகார் அளித்துள்ளார். விஜய்யின் பேச்சைக் கேட்ட குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரக் கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம் பிடித்துத் தனக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு, குழந்தைகளின் உளவியலைப் பாதிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Coimbatore கணபதி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன், Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் இது தொடர்பாக ஒரு புகார் மனுவை இன்று அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில், "விஜய்யின் பேச்சைக் கேட்ட எனது 5 வயது மகன், அவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று என்னிடம் அடம்பிடித்தான். நான் மறுப்பு தெரிவித்தபோது, அவன் உணவைத் தவிர்த்து அழுதுகொண்டே பிடிவாதம் பிடித்தான்" என்று தெரிவித்துள்ளார்.

"இறுதியில், தமிழக வெற்றிக் கழகத்திற்குத்தான் ஓட்டு போட்டேன் என்று எனது மகனிடம் பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. 'விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்' என அவன் அழுது வருவது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது" என்று பாலகிருஷ்ணன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் பிஞ்சு மனதில் இத்தகைய எண்ணங்களை விதைப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் முதிர்ச்சியற்ற இத்தகைய தூண்டுதலில் ஈடுபட்ட விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விஜய் பேசிய அந்த வீடியோ காட்சிகளைச் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் பாலகிருஷ்ணன் தனது மனுவில் எச்சரித்துள்ளார். விஜய்யின் இந்தப் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...