கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சுற்றுலாத்துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்படுவதால் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதில் சில தாமதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
Coimbatore:
கோவை, ஆக. 13: கோவையில் இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் மற்றும் ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் சார்பில் சர்வதேச சுற்றுலா மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்வில்தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்
பங்கேற்றார்.

மாநாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுற்றுலாத்துறையை வேகமாக வளர்ச்சியடையச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபலிபுரத்தை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு, ஆன்மீக, இயற்கை, சூழியல் மற்றும் வேளாண் சுற்றுலாவுக்கான திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
நாகூர், வேளாங்கண்ணி, திருக்கடையூர் உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களை ஒருங்கிணைத்து சிறப்புத் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கங்கை மற்றும் தாமிரபரணி ஆறுகளை இணைக்கும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது தனியார் பங்களிப்பின்றி அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுலாத்திட்டங்களை மேம்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சுற்றுலாத்துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்படுவதால் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதில் சில தாமதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பான பிரச்னைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், உயர்மட்டக் குழு அமைத்து அனுமதிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், தென்னிந்தியாவுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற நோக்கில் அவர் கூறியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்றும், அது வெறும் ஊகம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவரான ராகுல் காந்தி 2029-ல் நாட்டின் பிரதமராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை தமிழக வெற்றிக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்” என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சி 1967-க்குப் பிறகு 59 ஆண்டுகள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகவும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும், வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்தி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.