கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், உரிய விசாரணை நடத்த கோரியும் ABVP சார்பில் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போலீசார் விதித்திருந்த தடையை மீறி தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் அமுதன் (19), சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சிலரைப் பற்றி தகவல் அளித்ததால், அதில் தொடர்புடைய நபர்களால் அமுதன் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில், அமுதன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சார்பில் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்லூரியில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அமுதன் தகவல் அளித்ததாகவும், அதன் காரணமாக அவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் ABVP நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.

அமுதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும், கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மற்றும் டீன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், கல்லூரி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் ABVP நிர்வாகிகள் குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, போலீசார் விதித்திருந்த தடையை மீறி ABVP மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.



இதனால் கல்லூரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்களை மிரட்டியதாகப் புகார்: 10 தவெகவினர் மீது வழக்குப்பதிவு

செப் 24-ஆம் தேதி, தவெகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட 10 பேர், வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ஆய்வு நடத்...

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...