சூலூரில் தேசிய மாணவர் படையின் சிறப்பு முகாம் தொடக்கம்

சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் கோவை 4 தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் செப்டம்பர் 29 முதல் நடைபெறுகிறது. குடியரசு தின அணிவகுப்புக்கான தேர்ச்சி முகாமும் இதில் அடங்கும்.


கோவை: சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் கோவை 4 தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக தேசிய மாணவர் படை (NCC) சிறப்பு முகாம் செப்டம்பர் 29 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முகாம் சிறப்பு முகாம் மற்றும் கோவை மண்டல என்.சி.சியின் குடியரசு தின அணிவகுப்புக்கான தேர்ச்சி முகாம் என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது.

இந்த முகாமிற்கு லெப்டினன்ட் கர்னல் ஒய்னம் கமான்டிங் அதிகாரியாக உள்ளார். பத்து நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கோவை 4-ஆம் பட்டாலியனின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்களும், நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் அனிர்பன் பெளமிக் அவர்களும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர்படை அலுவலர்களும், சுபேதார் மேஜர் பாண்டியன் தலைமையிலான இராணுவத்தினரும் பயிற்சி அளித்து வருகின்றனர்.



கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஊட்டி, சேலம், நாமக்கல், திருச்சங்கோடு, தர்மபுரி பகுதிகளைச் சார்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ, மாணவியரும் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர். இம்முகாமில் குடியரசு தின முகாமிற்கான சிறந்த மாணவர் தேர்வு, கலைநிகழ்ச்சிகள், என்.சி.சி. வகுப்புகள், துப்பாக்கி சுடுதல், ஆயுதப் பயிற்சிகள், அணிவகுப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு முகாமிற்கு ஆர்.வி.எஸ். கல்லூரி தேசிய மாணவர்ப் படை அலுவலர் கேப்டன் டாக்டர் தீபக் ரிஷாந்த் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...