கோவை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் அக்டோபர் 5ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.


கோவை: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இதில் DDUGKY, RSETI, TNSDC ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ஜவுளி, உள்கட்டமைப்பு, விற்பனை, CNC இயக்குநர், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படித்தவர்கள், தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, ITI பயின்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரக் குறிப்பு, புகைப்படம் மற்றும் பிற தகுதிச் சான்றுகளின் அசல் மற்றும் நகல்களுடன் வர வேண்டும்.

இந்த முகாமில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...