கோவையில் சர்வதேச டாய்-சி மாநாடு துவக்கம்: மனம், உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சி

கோவையில் நான்கு நாள் சர்வதேச டாய்-சி மாநாடு துவங்கியது. மனம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாட்டிற்கான டாய்-சி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவையில் சர்வதேச அளவிலான டாய்-சி மாநாடு செப்டம்பர் 19 அன்று துவங்கியது. நித்திய குருகுலா அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த மாநாடு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோயமுத்தூர் கிளப்பில் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

மாநாட்டின் துவக்க விழாவில், நித்திய குருகுலா மன நல ஆலோசணை மையம் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சசி சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கவுரவ அழைப்பாளர்களான திருமதி லட்சுமி நாராயணன் மற்றும் பை மெட்டல் பேரிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவசைலம் நாராயணன் ஆகியோர் மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மாநாட்டில் முக்கிய விருந்தினராக ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள டாய் சி ஆரோக்கிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பால் லாம் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், டாய்-சி கலையின் பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். உடல் ஆரோக்கியம் மேம்பட, உடல் நலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட டாய்-சி எவ்வாறு உதவுகிறது என்பதை அவர் விளக்கினார்.

டாக்டர் பால் லாம், மனித வாழ்க்கையில் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதனை அதிகரிக்க டாய்-சி கலை பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் நித்திய குருகுலா நிர்வாகிகளான பிரசாந்த் சந்திரன், நடாஷா சந்திரன், சுதா சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு டாய்-சி கலையின் பயன்பாடுகள், முறையான பயிற்சிகள், மற்றும் இக்கலை குறித்த முழுமையான தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...