ஒடிசாவிலிருந்து கோவைக்கு கஞ்சா கடத்தல்: 7 பேர் கைது

கோவை ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சாவுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒடிசாவிலிருந்து கோவைக்கு கடத்தி வந்த இவர்கள், விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு வந்தது தெரியவந்தது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மதுவிலக்கு பிரிவு காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான காவலர்கள் கோவை ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லங்கா கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, அவர்களின் பையில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சாகு (34), டிரேந்தர் பெர்க்ரா (24), ரஞ்சித நாயக் (23), பிரசாந்த் தாகூர் (36), சாகர் முகாரி (57), நரேந்திர திரிபாதி (30), பல்தே ஜிபிலா (20) என்பது தெரியவந்தது. மேலும், கஞ்சாவை விற்பனை செய்ய ஒடிசாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஏழு பேரையும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆறு செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...