கோவையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் கைது- தாயுடன் சிறை சென்ற குழந்தைகள் !

கோவையில் இரு வேறு இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 2 பெண்கள் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை ஒரு சிலர் தொழிலாகவே செய்து வருகின்றனர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்களிடம் இருந்து அவ்வப்போது சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பதும் வழக்கம்.

இந்நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு ஒரு வயது குழந்தையை வைத்து பிச்சை எடுத்த சுகன்யா என்ற பெண்ணை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் ரத்தினபுரி, முத்துகுமரன் நகர் பள்ளிவாசல் அருகே மாதவி (9) மற்றும் தமிழரசி (2) ஆகிய இரு குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கவைத்த மாரியம்மாள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைபட்ட சின்னஞ்சிறு குழந்தைகள்:-

முன்னதாக, கோவையில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்த சுகன்யா மற்றும் மாரியம்மாளின் குழந்தைகளுக்கு ஒன்று மற்றும் இரண்டு வயதே நிறைவடைந்துள்ளதால் தாயுடனேயே அக்குழந்தைகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாரியம்மாளின் மற்றுமொரு 9 வயது குழந்தை மட்டும் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...