கோவை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஆய்வு

கோவை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஜூலை 26ஆம் தேதி ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ICCC) செயல்பாடுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் IAS நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அமைந்துள்ள இந்த மையத்திற்கு ஜூலை 26ஆம் தேதி விஜயம் செய்த ஆனந்த் மோகன், மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS உடனிருந்தார்.



ஆய்வின் போது துணை ஆணையாளர் K. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், நகர்நல அலுவலர் (பொ) Dr. பூபதி, உதவி ஆணையர் சந்தியா ஆகியோர் உடனிருந்தனர். மேலும், மண்டல சுகாதார அலுவலர்களான குணசேகரன், இராமச்சந்திரன், திருமால் மற்றும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.



ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) என்பது நகரின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் மையமாக செயல்படுகிறது. இது நகர நிர்வாகத்தை மேம்படுத்தவும், குடிமக்களுக்கான சேவைகளை திறம்பட வழங்கவும் உதவுகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட ஆனந்த் மோகன், அதன் பயன்பாடு குறித்து விரிவாக கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...