கோவை கிட்னி சென்டர் சார்பில் குணமடைந்த இரத்த புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு அறிமுகம்


கோயமுத்தூர் கிட்னி சென்டரில் இயங்கிவரும் இரத்தம் மற்றும் இரத்தபுற்றுநோய் அதிநவீன சிகிச்சை மையம் சார்பில் இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் குணமடைந்த இரத்த புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு கோவையில் முதல்முறையாக இன்று தொடங்கப்பட்டது. இதனை சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் சன் டிவி புகழ் ராஜா தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்வில் இரத்தநோய் சிகிச்சை நிபுணர் சுதந்திர கண்ணன் பேசுகையில், இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய்க்கான தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய்களுக்கு உதவுவதும், அவர்களின் தரத்தை உயர்த்துவதும் ஆகும். இரத்த புற்றுநோயானது குணபடுத்த கூடியது. பரவலாக குழந்தைகளை பாதிக்கும். இரத்தபுற்றுநோய் குழந்தைகளுக்கு 80-90% குணப்படுத்தக்கூடியது. இருந்தும் பெரியவர்களிடம் இந்நோயை குணப்படுத்தும் சதவீதம் குறைந்து காணப்படுகிறது. இதனை கண்டறிய இரத்த சோகை, காய்ச்சல், உடல் பாகங்களில் இருந்து இரத்த கசிவு போன்ற அறிகுறிகள் தென்படலாம். இந்நோய்க்கு முதற்கட்ட சிகிச்சைக்கு பண உதவி இல்லாமையே பெரியவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர். இந்த தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இவ்வகை குழந்தைகளுக்கு உதவுவதே ஆகும்.

பிறப்பிலிருந்து பல குழந்தைகள் இரத்த நோயான தலசிமியாவால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ஒருமுறை ரத்தம் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு செலுத்தினால் அவர்களின் ஆயுட்காலம் 30 வயதாகும். இதற்கு எலும்பு மஜ்சை மாற்று சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாகும். மேலும், பல ரத்தம் மற்றும் இரத்த வகை புற்றுநோய்கள் திருமண வயதில் தக்க கடியவை. நோய் குணமடைந்தாலும் சமூக சூழ்நிலையினால் திருமண வரன் பார்க்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. பல குணமடைந்த நோயாளிகளின் பெற்றோர் தகுந்த வரன் கிடைக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இவ்வகையான பிரச்சனைகளை களைய ரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய் அமைப்பு குணமடைந்த புற்றுநோயாளிகளுக்கு திருமண தகவல் மையம் ஏற்படுத்தி உள்ளது என்றார்.

 

இதனைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் ராஜா பேசுகையில், ஒரு மருத்துவர் தனது மருத்துவச் சேவையினை மட்டும் நோக்கமாகக் கொண்டில்லாமல் நோயாளிகளுக்கான மறுவாழ்விலும் கவனம் செலுத்தும் விதமாக மருத்துவர் சுதந்திர கண்ணன் செயல்படுவது ஆச்சரியமாக உள்ளது. சமூகத்தில் இதுபோன்ற நோயாளிகளை ஒதுக்கி வைத்துவிடுகின்றனர், இது தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவம், பிரார்த்தனை மட்டுமே ஒரு நோயாளிக்கு போதுமானது அல்ல. அவர்களுக்கு உதவிடும் வகையில் தற்போது கிட்னி சென்டரால் துவங்கப்பட்டுள்ள ஒருசில சேவைகளும் தேவையானதே.

பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மற்ற நிகழ்வுகளில் புற்றுநோயாளிகளை கொடூரமான முறையில் சித்தரித்து காட்டுவது தொடர்கிறது. அதனை தவிர்த்து சிறந்த விழிப்புணர்வினை ஏற்படுத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும். 

இன்று இங்குள்ளவர்களுக்கு கிடைக்கும் விழிப்புணர்வு பலருக்கும் கிடைப்பதில்லை. பொதுமக்களுக்கு இரத்தபுற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுறோய்கள் குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். 

புற்றுநோய் வந்துவிட்டலே வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி நமக்கு எவ்வித மகிழ்ச்சிகளும் இல்லை. திருமணம் உள்ளிட்டவை நடைபெறாது என தவறான சிந்தனைகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் உள்ளது. அதனை முறியடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் குணமடைந்த இரத்த புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது" என்றார்.

இதனைத்தொடர்ந்து, தலசிமியா என்ற இரத்த நோயால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் முதன்முதலில் ஹேப்லோ டிரேன்ஸ்பிளான்ட் சிகிச்சை பெற்ற முகிலேஷ் என்ற சிறுவருக்கு மேக்ஸ் பவுன்டேஷன் தலைவர் விஜி வெங்கடேஷ் விருது வழங்கி பாராட்டினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...