எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமி இடையே உட்கட்சி பூசல் - கோவையில் அண்ணாமலை பேட்டி

எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டனர். திமுகவினர் ஆடுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.


கோவை: டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போத அவர் பேசியாதவது, 2019அம் ஆண்டு அதிமுக ஆளும் கட்சி. பாஜக 303 சீட்டுகள் வாங்கினர். ஆனால் அன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்தது.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும் என எஸ்.பி.வேலுமணிக்கு அவர் பதிலளித்துள்ளார். எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது.

பாஜக இருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது உட்கட்சி பூசல் தான். கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு. இல்லை என்றால் ஒரு பேச்சு. அதிமுக கோவையில் அனைத்து எம்.எல்.ஏ இருந்தும் ஏன் வெற்றி பெற வில்லை. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள்.

பாஜகவிற்கு காலம் வரும். தொண்டர்கள் உணர்ச்சி வசபட வேண்டாம். திமுகவினர் ஆடுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம். வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் அவர் வாக்குவாதம் செய்தார்.

கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்து காட்டுவோம். படிப்படியாக தான் வெற்றியை பார்க்க முடியும். அதிகளவில் எஸ்.பி வேலுமணி தவறான புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளார்.

இணை அமைச்சர் பதவி ஏற்பதாக கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. கோவை மக்களுக்கு கடமை பட்டுள்ளோம். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்கு அளித்து உள்ளனர். கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் படைத்துள்ளது.

எஸ்.வி.சேகர் யார் என்று எனக்கு தெரியாது. எங்களின் செயல்பாடு தான் 2 இலக்குகளில் வாக்கு வாங்கியுள்ளோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை என்பதும் புதியவர்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுப்பது அதிகம். 2026 கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதிலே தெரியும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...