கோவை மாநகரில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து என்ஐஏ சார்பில் சுவரொட்டிகள்

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: தஞ்சாவூரை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019 ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.



இந்த ஐந்து பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் தற்போது மே.25 ஒட்டப்பட்டுள்ளது. அதில் முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹசன் என்ற தஞ்சாவூரை சேர்ந்த 5 பேர் புகைபடங்களுடன், தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா 5 லட்சம் வீதம், 5 பேருக்கு 25 லட்சம் ரூபாய் பணம் சன்மானமாக வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் NIA சார்பில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...