உடுமலை அருகே தமிழக கேரள எல்லை காந்தளூரில் கோடை விழா துவக்கம் - பாரம்பரிய நடனமாடி மலைவாழ் மக்கள் அசத்தல்

கோடை விழாவில் இடம்பெற்ற மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் காந்தளூர் இன்று உலகளவில் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. கடந்த வருடம் சிறந்த சுற்றுலா தளத்திற்கான விருதும் பெற்றது. இந்நிலையில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இப்போது கோடை விடுமுறை என்பதால் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிக்கின்றனர்.

இங்கு சந்தனக்காடு, இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, கச்சாரம் நீர்வீழ்ச்சி, பிரம்ரம் வியூ பாயிண்ட், குளிர்கால பழம் பச்சை கறி தோட்டங்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில் தினசரி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதையடுத்து காந்தலூர் ஃபெஸ்ட் கோடை திருவிழா நேற்று முதல் தொடங்கியது இந்தக் கோடை விழா இரண்டாம் வருடம் நடத்தப்படுகிறது.

கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் உள்பட கோடை விழாவில் அமைக்கப்பட்டுள்ளது.



நேற்று முதல் தொடங்கிய கோடை விழாவை கேரளா வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் தொடங்கி வைத்தார்.

தேவிகுளம் எம்எல்ஏ ஏ.ராஜா, காந்தளூர் பஞ்சாயத்து தலைவர் பி.டி. மோகன்தாஸ், கோடை விழா கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். மேலும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...