கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பவன்குமார், ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற மாநில அளவிலான விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஒரு வார காலத்திற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் கல்லூரிகள் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மனித சங்கிலியாக நின்று, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனைத் தடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு போதைப்பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பள்ளிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சிகள் “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற மாநில அளவிலான விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக தகவல் தெரிவித்த மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், அந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.