சொத்து பிரச்னை காரணமாக தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை

கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் அருந்தி விட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். பெண்ணின் சடலத்தை கைப்பற்றி தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தெக்கலுாரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், (60). இவரது தந்தை ராமசாமி மற்றும் இரண்டு சகோதாரர்கள் பாலசுப்ரமணி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சொத்து தகராறு ஏற்பட்டது. இவ்வழக்கு தாராபுரம் உரிமையியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கின் விசாரணையில் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது.

கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் அருந்தி விட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சடலத்தை கைப்பற்றி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



இதுகுறித்து போலீசார் கூறியதாவது, இறந்து போன கோவிந்தம்மாள் பாகப்பிரிவினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கில் தோல்வியடைந்தார். மேல்முறையீட்டை கோர்ட் தள்ளுபடி செய்த காரணத்தால், மனமுடைந்து அவர் கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன் விஷத்தை குடித்து விட்டு, கூடையில் வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பற்ற முயன்றும் முடியவில்லை. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், கோவிந்தம்மாள் தன் தாயை கட்டையால் தாக்கியது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Newsletter

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...