பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்தனுக்கு, முழு ஆதரவு அளிப்பதாக தேவாங்க செட்டியார் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு.


Coimbatore: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேவாங்க செட்டியார் சமூகத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் பேசிய தேவாங்க செட்டியார் சமூக பிரதிநிதிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக, நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதாக கூறினர்.

இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்தியானந்தனுக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் முழு ஆதரவு அளிப்பதாக கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.



மேலும், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவர்கள், இந்த முறை திமுகவின் வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க உள்ளதாகவும் உறுதியளித்தனர்.

திமுக மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதி திமுக பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் நித்தியானந்தன், நகர்மன்ற தலைவர் சியாமளா, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...